கணக்காய்வாளர் சட்டத்தின் தாமதம் தொடர்பில் கருத்து

கணக்காய்வாளர் சட்டத்தின் தாமதம் தொடர்பில் கணக்காய்வாளர் நாயகம் கருத்து

by Staff Writer 05-02-2018 | 7:26 PM
கணக்காய்வாளர் சட்டம் இருந்திருந்தால், முறிகள் மோசடி தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுப்பதற்கு சந்தர்ப்பம் ஏற்பட்டிருக்கும் என கணக்காய்வாளர் நாயகம் காமினி விஜேசிங்க தெரிவித்துள்ளார். சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் அனுமதி கிடைத்துள்ளதாக கணக்காய்வாளர் நாயகம் நியூஸ்பெஸ்டுக்குத் தெரிவித்தார். அரசாங்கத்தின் நூறு நாள் செயற்றிட்டத்தில் கணக்காய்வாளர் சட்டத்தை திருத்தியமைப்பதாக நல்லாட்சி அரசாங்கம் வாக்குறுதியளித்திருந்தது. 2015ஆம் ஆண்டு மே மாதம் 15ஆம் திகதி அங்கீகரிக்கப்பட்ட 19ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின்படி அமைக்கப்பட்ட ஆணைக்குழுவில் கணக்காய்வாளர் ஆணைக்குழுவும் உள்வாங்கப்பட்டதுடன், அந்த ஆணைக்குழுவிற்கான உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டனர். எனினும், இதுவரை தேசிய கணக்காய்வாளர் சட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை.