தேர்தல் தொடர்பில் 1285 முறைப்பாடுகள் பதிவு

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் 1285 முறைப்பாடுகள் பதிவு

by Staff Writer 05-02-2018 | 3:26 PM
உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் இதுவரை 1285 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தல் விதிமுறைகளை மீறியமை, வன்முறைகள், சட்டவிரோதமாக போஸ்டர்கள் மற்றும் கட்டவுட்களை ஒட்டியமை, அரச சேவையாளர்கள் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுப்பட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் பதிவாகியுள்ளன. கொழும்பு மாவட்டத்திலேயே தேர்தல் விதிமுறை மீறல்கள் அதிகளவில் பதிவாகியுள்ளன. கம்பஹா, குருணாகல், களுத்துறை மாவட்டங்களிலிருந்தும் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. தேர்தல் விதிமுறை மீறல் தொடர்பில் 201 முறைப்பாடுகளும் தேர்தல் வன்முறைகள் தொடர்பில் 84 முறைப்பாடுகளும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.