எஸ்.பதுமநாபன் தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மனு நிராகரிப்பு

எஸ்.பதுமநாபன் தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மனு நிராகரிப்பு

எஸ்.பதுமநாபன் தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மனு நிராகரிப்பு

எழுத்தாளர் Staff Writer

05 Feb, 2018 | 8:54 pm

முறிகள் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் சட்ட மாஅதிபர் திணைக்களம் விசாரணை நடத்திய போது, தமது அடிப்படை உரிமை மீறப்பட்டதாக மத்திய வங்கியின் ஊழியர் சேமலாப நிதிய உதவி அத்தியட்சகர் எஸ்.பதுமநாபன், தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மனுவை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வதற்கான அனுமதியை வழங்காமலேயே உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

இந்த மனு இன்று பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் உள்ளிட்ட மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் பரிசீலிக்கப்பட்ட போதே இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சட்டமாஅதிபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் முன்வைத்த விளக்கத்தை ஏற்று உயர்நீதிமன்றம் இந்த தீர்மானத்தை மேற்கொண்டதாக எமது நீதிமன்ற செய்தியாளர் குறிப்பிட்டார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்