பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் கைது

பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் கைது

பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் கைது

எழுத்தாளர் Staff Writer

04 Feb, 2018 | 7:41 pm

பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அந்த நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கசுன் பாலிசேன ஆகியோர் சற்று நேரத்திற்கு முன்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொள்ளுப்பிட்டி பிளவர் வீதியில் உள்ள வீட்டில் அர்ஜூன் அலோஷியஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.

கசுன் பாலிசேன, வௌ்ளவத்தை அர்துசா வீதியிலுள்ள வீடொன்றில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர்கள் இருவரும் இன்று நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

இலங்கை மத்திய வங்கி முறிகள் மோசடி தொடர்பிலான விசாரணை குறித்து கடந்த வௌ்ளிக்கிழமை நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்த குற்றப் புலனாய்வுத் திணைக்களம், ,அர்ஜுன் அலோசியஸ். கசுன் பாலிசேன, அர்ஜுன் மகேந்திரன் ஆகியோரை சந்தேகநபர்களாக அறிவித்தது.

எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு முன்னதாக நாடு திரும்பி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் வாக்குமூலமளிக்குமாறு அர்ஜுன் மகேந்திரனுக்கு நீதிமன்றம் உத்தரவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவர்கள் தொடர்புபட்டதாக கூறப்படும் சில குற்றங்களையும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கண்டறிந்துள்ளது. உள்ளக இரகசிய தகவல்களை பயன்படுத்தியமை, சதித் திட்டம் தீட்டியமை மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தமை அவற்றில் ஒரு குற்றமாகும்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்