புதுக்குடியிருப்பில் தேர்தல் துண்டுப் பிரசுரத்துடன் வேட்பாளர் கைது

புதுக்குடியிருப்பில் தேர்தல் துண்டுப் பிரசுரத்துடன் வேட்பாளர் கைது

புதுக்குடியிருப்பில் தேர்தல் துண்டுப் பிரசுரத்துடன் வேட்பாளர் கைது

எழுத்தாளர் Staff Writer

04 Feb, 2018 | 6:58 pm

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் தேர்தல் துண்டுப் பிரசுரத்துடன் வேட்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று இரவு 11.30 மணியளவில் விசுவமடு மூங்கிலாற்கு பகுதியில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் ஜக்கிய தேசியக் கட்சியின் துண்டுப் பிரசுரங்களை ஒட்ட முற்பட்ட ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளார்.

மூங்கிலாறு தெற்கினை சேர்ந்த 25 வயதான ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

விசுவமடு பிரதேச சபைக்கான தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியில் போட்டியிடும் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் கூறினார்.

சந்தேகநபரை முல்லைத்தீவு நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் குறிப்பிட்டனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்