இலங்கை – பங்களாதேஷ் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவுற்றது

இலங்கை – பங்களாதேஷ் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவுற்றது

இலங்கை – பங்களாதேஷ் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவுற்றது

எழுத்தாளர் Staff Writer

04 Feb, 2018 | 7:40 pm

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவுற்றது.

சிட்டகொங்கில் நடைபெற்ற இந்தப்போட்டியில் பங்களாதேஷ் முதல் இன்னிங்ஸில் 513 ஓட்டங்களைப் பெற்றது.

முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 9 விக்கெட் இழப்பிற்கு 713 ஓட்டங்களை பெற்று ஆட்டத்தை நிறுத்துவதாக அறிவித்தது.

இதன் பிரகாரம் 200 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க வேண்டிய கட்டாயத்தில் 3 விக்கெட் இழப்பிற்கு 81 ஓட்டங்களுடன் பங்களாதேஷ் இன்றைய ஐந்தாம் நாள் ஆட்டத்தை ஆரம்பித்தது.

18 ஓட்டங்களுடன் களமிறங்கிய மொமினுல் ஹக் டெஸ்ட் அரங்கில் தனது 5 ஆவது சதத்தை எட்டினார்.

மொமினுல் ஹக் முதல் இன்னிங்ஸில் 176 ஓட்டங்களைப் பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

தனது 03 ஆவது டெஸ்ட் அரைச்சதத்தை எட்டிய லிட்டன் தாஸ் 94 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார்.

பங்களாதேஷ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 307 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது போட்டி வெற்றி தோல்வியின்றிய முடிவை எட்டியது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected]wsfirst.lk இல் எங்களை தொடர்பு கொள்ளவும்