அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கான விசேட கூட்டமொன்று இன்று இடம்பெறவுள்ளது

அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கான விசேட கூட்டமொன்று இன்று இடம்பெறவுள்ளது

அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கான விசேட கூட்டமொன்று இன்று இடம்பெறவுள்ளது

எழுத்தாளர் Staff Writer

04 Feb, 2018 | 10:50 pm

பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கான விசேட கூட்டமொன்று இன்று இடம்பெறவுள்ளது.

சபாநாயகர் கரு ஜெயசூரியவின் தலைமையில் இன்று காலை, பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் நீல் இத்தவெல தெரிவித்தார்.

இதன்போது மத்திய வங்கி முறிகள் மற்றும் பாரிய ஊழல் மோசடி விசாரணை அறிக்கைகள் தொடர்பிலான விவாதம் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளது.

விவாதத்தின் போது கட்சிகளுக்கு நேரம் ஒதுக்குதல் மற்றும் விவாதத்தை நடத்துவதற்கான அடுத்த திகதியை தீர்மானித்தல் என்பன தொடர்பிலும் அவதானம் செலுத்தப்படவுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் நீல் இத்தவெல தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்