by Staff Writer 03-02-2018 | 9:32 PM
அமைச்சர் ரவூப் ஹக்கீம் சாய்ந்தமருதிற்கு வருகை தரக் கூடாது என தெரிவித்து இன்று அங்கு ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது.
சாய்ந்தமருது பிரதேசத்திலுள்ள கடைகள் மற்றும் அலுவலகங்கள் இன்று மூடப்பட்டிருந்ததாக நியூஸ்பெஸ்ட் செய்தியாளர் குறிப்பிட்டார்.
இதேவேளை, சாய்ந்தமருது கடற்கரை வீதியை மறித்து ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் கூட்டமொன்று நடைபெறுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த விடயம் தொடர்பில் கல்முனை பொலிஸாரிடம் நியூஸ்பெஸ்ட் வினவியது.
சாய்ந்தமருது பகுதியிலுள்ள விளையாட்டரங்கில் இந்த தேர்தல் பிரசாரக்கூட்டம் நடைபெறுவதாக பொலிஸார் கூறினர்.
வீதி போக்குவரத்திற்கு இதனால் எவ்வித பாதிப்புகளும் இல்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.