போதைப்பொருள், பீடி கட்டுகளுடன் இந்திய பிரஜைகள் இருவர் தலைமன்னாரில் கைது

போதைப்பொருள், பீடி கட்டுகளுடன் இந்திய பிரஜைகள் இருவர் தலைமன்னாரில் கைது

போதைப்பொருள், பீடி கட்டுகளுடன் இந்திய பிரஜைகள் இருவர் தலைமன்னாரில் கைது

எழுத்தாளர் Bella Dalima

03 Feb, 2018 | 3:30 pm

ஹெரோயின் என சந்தேகிக்கப்படும் ஒருவகை போதைப்பொருளுடன் தலைமன்னாரில் இரண்டு இந்திய பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் பயணித்திருந்த படகை சோதனையிட்ட போது, 423 கிராம் போதைப்பொருள், 157 பீடி கட்டுகள் ஆகியவை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இராமேஸ்வரம் மற்றும் தனுஷ்கோடி பகுதிகளைச் சேர்ந்த 19 மற்றும் 21 வயதான இரண்டு இளைஞர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களை இன்று மன்னார் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்