தேசிய நீர் வழங்கல் தொழிற்சங்க ஒன்றியத்தினர் அடையாளப் பணிப்பகிஷ்கரிப்பு

தேசிய நீர் வழங்கல் தொழிற்சங்க ஒன்றியத்தினர் அடையாளப் பணிப்பகிஷ்கரிப்பு

தேசிய நீர் வழங்கல் தொழிற்சங்க ஒன்றியத்தினர் அடையாளப் பணிப்பகிஷ்கரிப்பு

எழுத்தாளர் Bella Dalima

02 Feb, 2018 | 6:26 pm

சம்பளப் பிரச்சினையை முன்வைத்து தேசிய நீர் வழங்கல் தொழிற்சங்க ஒன்றியத்தினர் அடையாளப் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.

நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து நிலையங்களும் பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுத்ததாக ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர், பொறியியலாளர் உபாலி ரத்னாயக்க தெரிவித்தார்.

இதன் பிரகாரம், இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் வரை பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டது.

இந்த காலப்பகுதியில் நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் அலுவலக நடவடிக்கைகள் இடம்பெறவில்லை.

இந்த விடயம் தொடர்பில் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் பொது முகாமையாளர் தீப்தி சுமனசேகரவிடம் நியூஸ்பெஸ்ட் வினவியது.

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் அனைத்து ஊழியர்களும் இந்த தொழிற்சங்க நடவடிக்கையில் இணைந்திருந்ததாக அவர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், இந்த தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக நீர் வழங்கலுக்கு தடை ஏற்படாது என அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

இதேவேளை, நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற அடையாளப் பணிப்பகிஷ்கரிப்பிற்கு ஆதரவு தெரிவித்து வவுனியா நீர் வழங்கல் வடிகாலமைப்பு திணைக்கள அலுவலகத்திற்கு முன்பாக இன்று ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது

கிளிநொச்சி நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை ஊழியர்களும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்