கரைச்சி பிரதேச சபை செயலாளருக்கு எதிராக முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்

கரைச்சி பிரதேச சபை செயலாளருக்கு எதிராக முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்

கரைச்சி பிரதேச சபை செயலாளருக்கு எதிராக முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்

எழுத்தாளர் Bella Dalima

02 Feb, 2018 | 6:21 pm

கிளிநொச்சி – கரைச்சி பிரதேச சபை செயலாளருக்கு எதிராக முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் இன்று கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட இந்த கவனயீர்ப்புப் போராட்டம் கரைச்சி பிரதேச சபை முன்றல் வரை சென்றதாக நியூஸ்பெஸ்ட் செய்தியாளர் குறிப்பிட்டார்.

கரைச்சி பிரதேச சபை செயலாளர் தமக்கு எதிராக முறையற்ற வகையில் சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக இதன்போது முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

வரி அறவீடு மேற்கொள்ளும் போது நாளாந்தம் 10 ரூபா வீதம் வருடாந்தக் கட்டணமாக தலா 3650 ரூபா அறிவிடப்படுவதாவும், இதனை விடுத்து நாளாந்த அல்லது மாதாந்த அடிப்படையில் கட்டணத்தை அறவிடுமாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

எவ்வாறாயினும், தம்மிடமிருந்து அறவிடப்படும் வரியில் தமக்கான வசதிகள் எவையும் செய்துகொடுக்கப்படவில்லை என அவர்கள் குற்றம் சாட்டினர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்