மலையகத்தில் தொடர்ச்சியாக மழை: மண்சரிவு அபாயம் காரணமாக பலர் இடம்பெயர்வு

மலையகத்தில் தொடர்ச்சியாக மழை: மண்சரிவு அபாயம் காரணமாக பலர் இடம்பெயர்வு

மலையகத்தில் தொடர்ச்சியாக மழை: மண்சரிவு அபாயம் காரணமாக பலர் இடம்பெயர்வு

எழுத்தாளர் Bella Dalima

01 Feb, 2018 | 9:03 pm

மலையகத்தில் தொடர்ச்சியாகப் பெய்து வரும் மழை காரணமாக பலர் தங்களின் இருப்பிடங்களை விட்டு இடம்பெயர வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

நுவரெலியா – கந்தப்பளை, கொங்கோடியா தோட்டத்தில் கடந்த 30 ஆம் திகதி பெய்த கடும் மழை காரணமாக பல பகுதிகளில் மண்மேடுகள் சரிந்து வீழ்ந்துள்ளன.

இதனால் 7 குடும்பங்களைச் சேர்ந்த 35 பேர் இடம்பெயர்ந்து கொங்கோடி தமிழ் வித்தியாலயத்தில் தங்கியுள்ளனர்.

இதேவேளை, வலப்பனை – ராகலை, அலகரநோயா பகுதியில் மண்சரிவு அபாயம் காரணமாக 22 குடும்பங்களைச் சேர்ந்த 109 பேர் அலகரநோயா தமிழ் வித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், ராகலை மத்திய பிரிவில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக 19 குடும்பங்களைச் சேர்ந்த 89 பேர் பாதிக்கப்பட்டு, தற்போது பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக நியூஸ்பெஸ்ட் பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்