போலி நகை அடகு: ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி உறுப்பினருக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு

போலி நகை அடகு: ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி உறுப்பினருக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு

எழுத்தாளர் Bella Dalima

01 Feb, 2018 | 8:34 pm

யாழ்ப்பாணத்தில் போலி நகை அடகு வைக்கப்பட்டமை தொடர்பில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர் ஒருவருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் 08 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அந்நபர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் யாழ்ப்பாணத்தில் போலி நகையை அடகு வைத்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டிருந்தார்.

வழக்கு விசாரணைகளின் போது அவர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

வழக்கின் தீர்ப்பு யாழ். நீதவான் நீதிமன்றத்தில் இன்று அறிவிக்கப்படவிருந்த நிலையில், நீதிபதி எதிர்வரும் 08 ஆம் திகதிக்கு தீர்ப்பை ஒத்திவைத்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்