பங்களாதேஷூக்கு எதிரான முதல் டெஸ்ட்: இலங்கை சிறப்பான துடுப்பாட்டம்

பங்களாதேஷூக்கு எதிரான முதல் டெஸ்ட்: இலங்கை சிறப்பான துடுப்பாட்டம்

பங்களாதேஷூக்கு எதிரான முதல் டெஸ்ட்: இலங்கை சிறப்பான துடுப்பாட்டம்

எழுத்தாளர் Bella Dalima

01 Feb, 2018 | 9:15 pm

பங்களாதேஷூக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது.

முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடும் இலங்கை அணி இன்றைய இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 01 விக்கெட் இழப்பிற்கு 187 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

சித்தகொங்கில் நடைபெறும் இந்தப் போட்டியில் 4 விக்கெட் இழப்பிற்கு 374 ஓட்டங்களுடன் பங்களாதேஷ் முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்தது.

மொமினுல் ஹக் 175 ஓட்டங்களுடனும், மஹமதுல்லா 9 ஓட்டங்களுடனும் ஆட்டத்தை ஆரம்பித்தனர்.

சிறப்பாகத் துடுப்பெடுத்தாடிய மஹ்மதுல்லா தனது 15 ஆவது டெஸ்ட் அரைச்சதத்தைக் கடந்தார்.

பங்களாதேஷ் அணி முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 513 ஓட்டங்களைப் பெற்றது.

பந்து வீச்சில் ரங்கன ஹேரத் மற்றும் சுரங்க லக்மால் ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர்.

முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த இலங்கை அணி ஓட்டமின்றிய நிலையில் முதல் விக்கெட்டை இழந்தது.

திமுத் கருணாரத்ன ஓட்டமின்றி ஆட்டமிழந்தார்.

குசல் மென்டிஸ் மற்றும் தனஞ்சய டி சில்வா ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்காக 187 ஓட்டங்களைப் பகிர்ந்து இலங்கை அணியை சவாலான நிலைக்கு உயர்த்தியது.

குசல் மென்டிஸ் டெஸ்ட் அரங்கில் தனது 5 ஆவது அரைச்சதத்தை எட்டினார்.

சிறப்பாகத் துடுப்பெடுத்தாடிய தனஞ்சய டி சில்வா டெஸ்ட் அரங்கில் தனது நான்காவது சதத்தைப் பூர்த்தி செய்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்