தேயிலைத் தோட்டங்களில் வனவிலங்குகளின் அட்டகாசம் அதிகரிப்பு: லிந்துலையில் ஆர்ப்பாட்டம்

தேயிலைத் தோட்டங்களில் வனவிலங்குகளின் அட்டகாசம் அதிகரிப்பு: லிந்துலையில் ஆர்ப்பாட்டம்

எழுத்தாளர் Bella Dalima

01 Feb, 2018 | 8:50 pm

தேயிலைத் தோட்டங்களில் வனவிலங்குகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து லிந்துலை – மெராயா, தங்ககலை மேற்பிரிவுத் தோட்ட மக்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தங்ககலை மேற்பிரிவில் கொழுந்து நிறுவை செய்யும் இடத்தில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தோட்டத்தொழிலாளர்களால் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தேயிலை மலைகள் காடுகளாகியுள்ளதாகவும் அவற்றை நிர்வாகத்தினர் உரிய முறையில் பராமரிப்பதில்லை எனவும் தொழிலாளர்கள் சுட்டிக்காட்டினர்.

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்