செல்வநகர் மக்களுக்கு வறட்சி நிவாரணமாக வழங்கப்பட்ட உலர் உணவுப் பொதிகளின் விலைப்பட்டியல் மாற்றம்

செல்வநகர் மக்களுக்கு வறட்சி நிவாரணமாக வழங்கப்பட்ட உலர் உணவுப் பொதிகளின் விலைப்பட்டியல் மாற்றம்

எழுத்தாளர் Bella Dalima

01 Feb, 2018 | 9:47 pm

திருகோணமலை – தோப்பூர், செல்வநகர் பகுதி மக்களுக்கு வறட்சி நிவாரணமாக வழங்கப்பட்ட உலர் உணவுப் பொதிகளின் விலைப்பட்டியல் மாற்றப்பட்டுள்ளதைத் தொடர்ந்து பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

பருப்பு, பயறு, தேயிலை உள்ளிட்ட பொருட்கள் நிர்ணய விலையை விட அதிக விலை குறிக்கப்பட்டு தமக்கு வழங்கப்பட்டதாக மக்கள் தெரிவித்தனர்.

சேருநுவர பலநோக்குக் கூட்டுறவு சங்கத்தினரால் இந்த உலர் உணவுப் பொதிகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக நியூஸ்பெஸ்ட்டின் பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.

இந்த விடயம் தொடர்பில் சேருநுவர பிரதேச செயலாளரைத் தொடர்பு கொண்டு நியூஸ்பெஸ்ட் வினவியது.

நிவாரணப்பொருள் விநியோகத்தின் போது பிரச்சினைகள் ஏற்படுமாயின் விநியோகத்தை நிறுத்துமாறு அறிவுறுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதுவரை 4 தடவைகள் நிவாரணப்பொதிகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் அதன்போது இவ்வாறான பிரச்சினைகள் ஏற்படவில்லையெனவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், இந்த விடயம் தொடர்பில் தாம் ஆராய்ந்து பார்ப்பதாகவும் சேருநுவர பிரதேச செயலாளர் குறிப்பிட்டார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்