சுதந்திர தின நிகழ்விற்கான ஒத்திகையால் பாரிய அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்கும் பொதுமக்கள்

சுதந்திர தின நிகழ்விற்கான ஒத்திகையால் பாரிய அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்கும் பொதுமக்கள்

எழுத்தாளர் Bella Dalima

01 Feb, 2018 | 8:10 pm

காலி முகத்திடலுக்கு முன்பாகவுள்ள வீதியில் சுதந்திர தின நிகழ்விற்கான ஒத்திகை இடம்பெற்று வருகிறது.

இதனால் ஏற்படும் வாகன நெரிசலால் பொதுமக்கள் பலரும் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர்.

பெரும்பாலானோர் உரிய நேரத்தில் அலுவலகக் கடமைகளுக்கு சமூகமளிக்க முடியாமற்போவதாக அதிருப்தி வௌியிட்டனர்.

சுதந்திர தின நிகழ்விற்கான ஒத்திகை கடந்த 27 ஆம் திகதி ஆரம்பமானது.

காலி வீதி, காலி முகத்திடல் சுற்றுவட்டத்தில் இருந்து பழைய பாராளுமன்ற சுற்றுவட்டம் வரையான பகுதி, காலை 7 மணி தொடக்கம் நண்பகல் 12 மணி வரை நாளை மறுதினம் (03) வரை மூடப்பட்டிருக்கும் என பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டிருந்தது.

இந்நிலையில், இன்று காலை ஒத்திகை இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் கொழும்பிற்குள் பிரவேசிக்கும் பல வீதிகளில் கடும் வாகன நெரிசல் நிலவியது.

138 ஆம் இலக்க பஸ் வீதி, நகர மண்டபம், லிப்டன் சுற்றுவட்டம், பூங்கா வீதி, விஹாரமாதேவி பூங்காவிற்கு அருகில் அதிகளவான வாகனங்களை நிறுத்தி வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

கொள்ளுப்பிட்டி, பம்பலப்பிட்டி, காலி வீதி மற்றும் பித்தளைச்சந்தி ஆகிய பகுதிகளிலும் வாகன நெரிசல் காணப்பட்டது.

சுகாதாரம் அல்லது போக்குவரத்துத் துறைகளைச் சேர்ந்தவர்கள் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் முன்னெடுக்கும் தொழிற்சங்க நடவடிக்கைகளைக் கண்டிக்கும் வகையில் அரசாங்கம் செயற்படுகின்றது.

எனினும், இவ்வாறு நெரிசலை ஏற்படுத்தும் வகையில் அரசாங்கம் செயற்படுவது மக்களை அசௌகரியங்களுக்கு உள்ளாக்கும் செயற்பாடு இல்லையா?

இந்த ஒத்திகையை காலை 9 மணிக்கு பின்னர் ஆரம்பித்தால் மக்கள் அசௌகரியத்திற்குள்ளாவதை தவிர்க்க முடியும் அல்லவா?

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்