எரித்திரியாவில் ஆண்கள் இரண்டாவது திருமணம் செய்யாவிட்டால் சிறைத்தண்டனை

எரித்திரியாவில் ஆண்கள் இரண்டாவது திருமணம் செய்யாவிட்டால் சிறைத்தண்டனை

எரித்திரியாவில் ஆண்கள் இரண்டாவது திருமணம் செய்யாவிட்டால் சிறைத்தண்டனை

எழுத்தாளர் Bella Dalima

01 Feb, 2018 | 6:14 pm

வட கிழக்கு ஆப்பிரிக்க நாடான எரித்திரியாவில் ஆண்கள் இரண்டாவது திருமணம் செய்யாவிட்டால் சிறைத்தண்டனை விதிக்கும் புதிய சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

பல நாடுகளில் இரண்டாவது திருமணம் செய்தால் குற்றம் என்ற நிலையில், எரித்ரியா என்ற நாட்டில் ஆண்கள் இரண்டாவது திருமணம் செய்யாவிட்டால் சிறைத்தண்டனை என்ற புதிய சட்டம் அமலுக்கு வந்துள்ளது.

எரித்திரியாவில் அடிக்கடி போர் நடந்து வருகிறது. இப்போர்களில் ஆண்கள் பலர் மடிந்து வருகின்றனர். எனவே அந்நாட்டில் ஆண்களின் சதவிகிதத்தை விட பெண்களின் சதவிகிதம் அதிகரித்து வருகின்றது

இதனை சரிக்கட்ட அந்நாட்டில் ஒரு புதிய சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி அந்நாட்டைச் சேர்ந்த ஆண்கள் கண்டிப்பாக இரண்டு திருமணம் செய்ய வேண்டும். இரண்டு திருமணம் செய்ய ஆண்கள் மறுத்தாலோ, கணவர் இரண்டாவது திருமணம் செய்ய முதல் மனைவி மறுத்தாலோ அவர்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்படும். மேலும், ஒரு ஆண் இரண்டு திருமணங்களுக்கு மேல் திருமணம் செய்தாலும் அந்நாட்டில் அது குற்றமாகக் கருதப்படாது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்