இளவாலையில் திருடர்களால் தாக்கப்பட்ட யுவதி உயிரிழப்பு

இளவாலையில் திருடர்களால் தாக்கப்பட்ட யுவதி உயிரிழப்பு

இளவாலையில் திருடர்களால் தாக்கப்பட்ட யுவதி உயிரிழப்பு

எழுத்தாளர் Bella Dalima

01 Feb, 2018 | 4:17 pm

யாழ்ப்பாணம் – இளவாலை பகுதியில் திருடர்களால் தாக்கப்பட்ட யுவதியொருவர் உயிரிழந்துள்ளார்.

இளவாலையில் உள்ள வீடொன்றினுள் புகுந்த திருடர்களால் 25 வயதான யுவதி தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

யுவதியைத் தாக்கிவிட்டு வீட்டிலிருந்த ஒரு இலட்சம் ரூபா பணத்தைத் திருடிச்சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதலுக்கு இலக்கான யுவதி தெள்ளிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

சடலம் மீதான பிரேதப் பரிசோதனை இன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

இளவாலை பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்