ஊவா மாகாண முதல்வரிடம் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணை நிறைவு

ஊவா மாகாண முதல்வரிடம் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணை நிறைவு

எழுத்தாளர் Bella Dalima

01 Feb, 2018 | 3:29 pm

பதுளையில் பாடசாலை அதிபர் ஒருவரை முழந்தாளிடச் செய்த ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவிடம் மனித உரிமைகள் ஆணைக்குழு மேற்கொண்ட விசாரணைகள் முடிவடைந்துள்ளன.

மனித உரிமைகள் ஆணைக்குழுவால் விடுக்கப்பட்ட அறிவித்தலின் பிரகாரம் ஊவா மாகாண முதலமைச்சர் ஆணைக்குழுவில் இன்று காலை ஆஜரானார்

காலை 9 மணி முதல் 12.30 மணி வரை அவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதாக நியூஸ்பெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.

இன்றைய தினம் விசாரணைகளுக்கு ஆஜராக முடியாது என தெரிவித்த ஊவா மாகாண முதலமைச்சர், பிறிதொரு நாளை அறிவிக்குமாறு விடுத்த கோரிக்கையை மனித உரிமைகள் ஆணைக்குழு நிராகரித்தது.

இந்த நிலையில், இன்றைய தினம் கட்டாயமாக ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராக வேண்டும் என அறிவிக்கப்பட்டதை அடுத்து அவர் ஆஜராகியமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன், ஏற்கனவே இந்த விடயம் தொடர்பில் கடந்த வாரம் ஊவா மாகாண கல்வி செயலாளர் சந்தியா அம்பன்வெல , மாகாண கல்விப் பணிப்பாளர் உள்ளிட்டோரிடம் 10 மணித்தியாலங்கள் விசாரணை மேற்கொள்ளப்பட்டன.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்