வறட்சி காரணமாக மின் விநியோக தடை ஏற்படக்கூடும் – மின்சக்தி அமைச்சு

வறட்சி காரணமாக மின் விநியோக தடை ஏற்படக்கூடும் – மின்சக்தி அமைச்சு

By Sujithra Chandrasekara

Feb 14, 2018 | 10:05 am

COLOMBO (Newsfirst) – நிலவும் வறட்சியான காலநிலைக் காரணமாக அடுத்த மாதம் தொடர்ச்சியான மின் விநியோக தடை ஏற்படக்கூடும் என மின்சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கதக்க சக்திவள அமைச்சு தெரிவித்துள்ளது.

நீர்மின்உற்பத்தி செய்யப்படும் பிரதான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் குறைவடைந்தமையால் இந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷ்ன ஜயவர்தன குறிப்பிட்டார்.

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் 60.3 வீதத்தாலும், மவுசாகலை நீர்த்தேக்கத்தில் 63.8 வீதமாகவும், கொத்மலை நீர்த்தேக்கத்தில் 39.2 வீதமாகவும் நீர்மட்டம் குறைவடைந்துள்ளதாக அவர் கூறினார்.

இதேவேளை, நாளாந்த மின்நுகர்வு மணிக்கு 41 கிகா வொட் காணப்படுவதாகவும் மின்சக்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதன் காரணமாக 100 மெகா வொட் மின்சாரத்தை அனல்மின் உற்பத்தியிலிருந்து தேசிய கட்டமைப்புக்கு இணைப்பது தொடர்பிலும் கவனம் செலுத்தியுள்ளதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.