பங்களாதேஷுக்கு எதிரான 2 ஆது டெஸ்ட்: இலங்கை 312 ஓட்டங்களால் முன்னிலை

பங்களாதேஷுக்கு எதிரான 2 ஆது டெஸ்ட்: இலங்கை 312 ஓட்டங்களால் முன்னிலை

By Bella Dalima

Feb 09, 2018 | 5:29 pm

கொழும்பு (நியூஸ்ஃபெஸ்ட்)

பங்களாதேஷுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 312 ஓட்டங்களால் முன்னிலை பெற்றுள்ளது.

இரண்டாம் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடும் இலங்கை அணி இன்றைய மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 200 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

மிர்பூர் மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் இரண்டாம் நாளான இன்று 4 விக்கெட் இழப்பிற்கு 56 ஓட்டங்களுடன் பங்களாதேஷ் முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்தது.

துடுப்பாட்ட வீரர்கள் பிரகாசிக்கத் தவறிய நிலையில், பங்களாதேஷ் முதல் இன்னிங்ஸில் 110 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்தது.

மெஹிடி ஹஷான் மிராஸ் அதிகபட்சமாக 38 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்து வீச்சில் சுரங்க லக்மால், அகில தனஞ்சய ஆகியோர் தலா 3 விக்கெட்களையும், டில்ருவன் பெரேரா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

112 ஓட்டங்கள் முன்னிலையுடன் இரண்டாம் இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணி 80 ஓட்டங்களுக்கு முதல் மூன்று விக்கெட்களையும் இழந்தது.

ரொஷேன் சில்வா மற்றும் அணித்தலைவர் தினேஷ் சந்திமால் ஜோடி ஐந்தாவது விக்கெட்டிற்காக 51 ஓட்டங்களைப் பகிர்ந்தது.

தினேஷ் சந்திமால் 30 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

ரொஷேன் சில்வா டெஸ்ட் அரங்கில் தனது 03 ஆவது அரைச்சதத்தை எட்டினார்.