பங்களாதேஷுக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் போட்டியை கைப்பற்றியது இலங்கை

பங்களாதேஷுக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் போட்டியை கைப்பற்றியது இலங்கை

பங்களாதேஷுக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் போட்டியை கைப்பற்றியது இலங்கை

எழுத்தாளர் Staff Writer

10 Feb, 2018 | 1:13 pm

COLOMBO (Newsfirst) – பங்களாதேஷுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரை இரண்டுக்கு பூச்சியம் என்ற கணக்கில் இலங்கை கைப்பற்றியுள்ளது.

டாக்காவில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 215 ஓட்டங்களால் இலகுவாக வெற்றியீட்டியது.

இந்தப் போட்டியில் 339 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு இரண்டாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 123 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

சிறப்பாக பந்து வீசிய அகில தனஞ்சய 5 விக்கெட்டுக்களையும் ரங்கன ஹேரத் நான்கு விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

பங்களாதேஷ் அணி சார்பில் மொமினுள் ஹக் 33 ஓட்டங்களை குவித்தார்.

ஏனைய துடுப்பாட்ட வீரர்கள் குறைந்த ஓட்ட எண்ணிக்கையுடன் ஆட்டமிழந்தனர்.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி தனது முதல் இன்னிங்சில் 222 ஓட்டங்களை பெற்றதுடன் பங்களாஷே் 110 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

இரண்டாவது இன்னிங்சில் இலங்கை அணி 226 ஓட்டங்களை பெற்றிருந்தது.