ஜூலியை களமிறக்கும் அனிருத்

ஜூலியை களமிறக்கும் அனிருத்

ஜூலியை களமிறக்கும் அனிருத்

எழுத்தாளர் Sujithra Chandrasekara

13 Feb, 2018 | 12:33 pm

COLOMBO (Newsfirst) – தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத் காதலர் தினத்தை முன்னிட்டு ஜூலி என்ற பாடலை வெளியிட இருப்பதாக அறிவித்திருக்கிறார்.

தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராக வலம் வரும் இவரது இசைக்கு இளைஞர்களிடையே எப்போதும் நல்ல வரவேற்பு இருக்கிறது. அஜித், விஜய், சூர்யா, தனுஷ் என முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து வரும் அனிருத், அவ்வப்போது ஆல்பம் பாடல்களையும் வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில், காதலர் தினத்தை முன்னிட்டு வருகிற பெப்ரவரி 14 ஆம் திகதி ஜூலி என்ற சிங்கிள் டிராக்கை வெளியிடப் போவதாக அனிருத் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அந்த பாடலை தானா சேர்ந்த கூட்டம் படத்தை இயக்கிய விக்னேஷ் சிவன் எழுதியிருக்கிறார். சோனி மியூசிக் அந்த பாடலை வெளியிடுகிறது.

அனிருத் ஏற்கனவே `எனக்கென யாரும் இல்லையே’, `அவளுக்கென்ன’, `ஒன்னுமே ஆகல’ உள்ளிட்ட ஆல்பம் பாடல்களை காதலர் தினத்தன்று வெளியிட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜூலி,அனிருத்,எசையமைப்பாளர்,காதலர் தினம்