சமந்தாவின் அடுத்த பயணம்

சமந்தாவின் அடுத்த பயணம்

சமந்தாவின் அடுத்த பயணம்

எழுத்தாளர் Sujithra Chandrasekara

20 Feb, 2018 | 9:12 am

விஷாலுடன் `இரும்புத்திரை’, சிவகார்த்திகேயனுடன் `சீமராஜா’ என பிசியாக நடித்து வரும் சமந்தா அவரது அடுத்த பயணத்தை ஆரம்பித்துள்ளார்.

முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் சமந்தா நடிப்பில் `இரும்புத்திரை’ படம் ரிலீசுக்கு தயாராகி இருக்கிறது. சமந்தா தற்போது சிவகார்த்திகேயன் ஜோடியாக `சீமராஜா’ படத்திலும், ராம் சரண் ஜோடியாக `ரங்கஸ்தலம்’ படத்திலும் நடித்து வருகிறார்.

இந்த இரு படங்களுக்கு இடையே சமந்தா அவரது அடுத்த படமான `யு-டர்ன்’ தமிழ் ரீமேக்கிலும் தற்போது நடிக்கத் துவங்கியிருக்கிறார் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த படத்தில் நடிகர் ஆதி பொலிஸாக நடிக்கிறார்.

நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையான இந்த படத்தில், ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்த கதாபாத்திரத்தில் இளம் பத்திரிக்கை நிருபராக சமந்தா நடிக்க இருக்கிறார்.

அடுத்தடுத்து நடக்கும் கொலைகள் குறித்த துப்பறியும் கதாபாத்திரத்தில் சமந்தா நடிக்கிறார். சமந்தாவின் காதலராக ராகுல் ரவீந்திரன் நடிக்கிறார்.

பவன் குமார் இயக்கும் இந்த படம் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் ரீமேக் செய்யப்படுகிறது. நிகேத் பூமிரெட்டி இந்த படத்திற்கு ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார்.