ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கம் ஒன்றை ஸ்தாபிப்பதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது: பின் வரிசை உறுப்பினர்கள்

ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கம் ஒன்றை ஸ்தாபிப்பதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது: பின் வரிசை உறுப்பினர்கள்

By Bella Dalima

Feb 13, 2018 | 10:08 pm

Colombo (Newsfirst)

ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கம் ஒன்றை ஸ்தாபிப்பதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பின் வரிசை உறுப்பினர்கள் சிலர் தெரிவித்தனர்.

பிரதமருடன் இன்று நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னரே அவர்கள் இதனைக் கூறினர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை உறுப்பினர்களுடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்க 2 சந்தர்ப்பங்களில் இன்று கலந்துரையாடினார்.

10 பின் வரிசை உறுப்பினர்களுடன் இன்று காலை 10 மணிக்கு அலரி மாளிகையில் முதல் சந்திப்பு ஆரம்பமானது.

அக்கலந்துரையாடலின் பின்னர் ஊகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கப்பட்டது.

காணொளியில் காண்க…