இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் புதிய தலைவராக ஆறுமுகன் தொண்டமான்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் புதிய தலைவராக ஆறுமுகன் தொண்டமான்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் புதிய தலைவராக ஆறுமுகன் தொண்டமான்

எழுத்தாளர் Sujithra Chandrasekara

16 Feb, 2018 | 12:34 pm

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் புதிய தலைவராக கட்சியின் பொதுச்செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் நியமிக்கப்பட்டுள்ளார்.

கொட்டகலையில் இன்று காலை கூடிய நிர்வாக மற்றும் தேசிய சபை கூட்டத்தில் அவர் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் பதவியை பிரதி அமைச்சர் முத்து சிவலிங்கம் இராஜினாமா செய்ததை அடுத்து புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, முத்து சிவலிங்கம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.