இலங்கையில் நெல் அல்லாத விவசாய உற்பத்திகளை ஊக்குவிக்கத் திட்டம்

இலங்கையில் நெல் அல்லாத விவசாய உற்பத்திகளை ஊக்குவிக்கத் திட்டம்

இலங்கையில் நெல் அல்லாத விவசாய உற்பத்திகளை ஊக்குவிக்கத் திட்டம்

எழுத்தாளர் Bella Dalima

10 Feb, 2018 | 6:38 pm

இலங்கையில் நெல் அல்லாத விவசாய உற்பத்திகளை ஊக்குவிக்கும் திட்டமொன்றை விவசாய அமைச்சு முன்னெடுத்துள்ளதாக உலக வங்கியின் சர்வதேச அபிவிருத்திக்கான அமைப்பின் செயற்றிட்டப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இந்தத் திட்டத்தில் கொய்யா, மிளகாய், பாகற்காய், பப்பாசி, வெங்காயம், நிலக்கடலை, அன்னாசி, திராட்சை போன்ற பயிர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, அனுராதபுரம், பொலன்னறுவை, மட்டக்களப்பு, மொனராகலை, மாத்தளை ஆகிய 7 மாவட்டங்களில் இந்த செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.