இந்திய மீனவர்கள் 109 பேரை விடுதலை செய்வதற்கு பரிந்துரை

இந்திய மீனவர்கள் 109 பேரை விடுதலை செய்வதற்கு பரிந்துரை

இந்திய மீனவர்கள் 109 பேரை விடுதலை செய்வதற்கு பரிந்துரை

எழுத்தாளர் Sujithra Chandrasekara

16 Feb, 2018 | 8:56 am

COLOMBO (Newsfirst) – யாழ்ப்பாணத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் 109 பேரை விடுதலை செய்வதற்கு சட்ட மாஅதிபர் திணைக்களம் பரிந்துரை செய்துள்ளது.

விடுதலை செய்வதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள மீனவர்களை ஊர்காவற்துறை மற்றும், பருத்தித்துறை ஆகிய நீதவான் நீதிமன்றங்களில் இன்று ஆஜர்படுத்தவுள்ளதாக கடற்றொழில் திணைக்களத்தின் யாழ். மாவட்ட உதவிப் பணிப்பாளர் ஜெயராஜசிங்கம் சுதாகரன் தெரிவித்தார்.

தமிழகத்தின் பல பகுதிகளை சேர்ந்தவர்களே இவ்வாறு விடுதலை செய்யப்படவுள்ளனர்.

விடுதலை செய்யப்படவுள்ள 109 மீனவர்களை தவிர மேலும் எட்டு தமிழக மீனவர்கள் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் வடக்கு கடற்பிராந்தியங்களில் பல்வேறு சந்தர்ப்பங்களில் கைது செய்யப்பட்டவர்களே தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.