வறட்சி, அதிக மழையால் பாதிப்படையும் சிறு தேயிலைத் தோட்டங்களுக்கு புதிய காப்புறுதித் திட்டம் அறிமுகம்

வறட்சி, அதிக மழையால் பாதிப்படையும் சிறு தேயிலைத் தோட்டங்களுக்கு புதிய காப்புறுதித் திட்டம் அறிமுகம்

வறட்சி, அதிக மழையால் பாதிப்படையும் சிறு தேயிலைத் தோட்டங்களுக்கு புதிய காப்புறுதித் திட்டம் அறிமுகம்

எழுத்தாளர் Bella Dalima

31 Jan, 2018 | 4:13 pm

வறட்சி மற்றும் அதிக மழையுடனான காலநிலை காரணமாக பாதிப்படையும் சிறு தேயிலைத் தோட்டங்களுக்கு புதிய காப்புறுதித் திட்டமொன்றை அறிமுகப்படுத்த சிறு தேயிலைத் தோட்ட அபிவிருத்தி அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த மாதம் முதல் குறித்த காப்புறுதித் திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக சிறு தேயிலைத் தோட்ட அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் விஜேரத்ன தேவகெதர தெரிவித்தார்.

சீரற்ற வானிலை காரணமாக பாதிப்படைந்த சிறு தேயிலைத் தோட்டங்களுக்கு இந்தத் திட்டத்தின் மூலம் ஒரு ஹெக்டேயருக்கு 12 இலட்சம் இழப்பீடு வழங்கப்படும் என சுட்டிக்காட்டினார்.

இந்த புதிய காப்புறுதித் திட்டத்திற்கு, பிரதேச செயலகங்களினூடாக விண்ணப்பிக்க முடியும் என சிறு தேயிலைத் தோட்ட அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் விஜேரத்ன தேவகெதர மேலும் குறிப்பிட்டார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்