ஒரு சொட்டுத் தண்ணீர் கூட இல்லாத உலகின் முதல் நகரமாகிறது தென் ஆப்பிரிக்காவின் கேப் டவுன்

ஒரு சொட்டுத் தண்ணீர் கூட இல்லாத உலகின் முதல் நகரமாகிறது தென் ஆப்பிரிக்காவின் கேப் டவுன்

ஒரு சொட்டுத் தண்ணீர் கூட இல்லாத உலகின் முதல் நகரமாகிறது தென் ஆப்பிரிக்காவின் கேப் டவுன்

எழுத்தாளர் Bella Dalima

31 Jan, 2018 | 5:01 pm

தென் ஆப்பிரிக்காவின் கேப் டவுன் (Cape Town) நகரம் ஒரு சொட்டுத் தண்ணீர் கூட இல்லாத உலகின் முதல் நகரமாகப் போகிறது.

அந்நகர மக்களுக்கு மிகப் பயங்கரமான எச்சரிக்கையாக அமைந்துள்ள இந்த நிகழ்விற்கான திகதியும் குறிக்கப்பட்டுவிட்டது.

இந்த எச்சரிக்கைச் செய்தி உலக நாடுகளையும் கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

தொடர்ந்து 3 ஆண்டுகளாக மழை இல்லாததாலும் மோசமான பருவநிலை மாற்றம் காரணமாகவும் அனைத்து நீர்நிலைகளும் வறண்டு போயுள்ளன.

தென் ஆப்பிரிக்காவின் முக்கிய நகரங்களில் கூட வீடுகளுக்கு குழாய் மூலம் தண்ணீர் வழங்கும் பணி பல நாட்களுக்கு முன்பே நிறுத்தப்பட்டுவிட்டது.

மருத்துவமனைகள், பாடசாலைகள் போன்றவற்றிற்கு மட்டுமே குழாய் மூலம் தண்ணீர் வழங்கப்படுகிறது. இந்நிலையில் அதுவும் தற்போது குறைக்கப்பட்டிருக்கிறது.

இவ்வளவு அபாயகரமான கேப் டவுன் நகரம் ஏப்ரல் 22 ஆம் திகதியுடன் ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லாத நகரமாக மாறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஏப்ரல் 12 ஆம் திகதியே அந்த நிலை ஏற்படும் என்ற மறு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தண்ணீரின் மகத்துவத்தை அனைவரும் அறியும் நாள் வெகுதொலைவில் இல்லை!


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்