ஐ.தே.க-வின் உப தலைவர் பதவியை ரவி கருணாநாயக்க வகிக்க முடியாது: மீளாய்வுக்குழு பரிந்துரை

ஐ.தே.க-வின் உப தலைவர் பதவியை ரவி கருணாநாயக்க வகிக்க முடியாது: மீளாய்வுக்குழு பரிந்துரை

எழுத்தாளர் Bella Dalima

31 Jan, 2018 | 3:36 pm

ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவர் பதவியை ரவி கருணாநாயக்க வகிக்க முடியாது என முறிகள் விவகாரம் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை குறித்து மீளாய்வு செய்த ஐக்கிய தேசியக் கட்சியின் குழு பரிந்துரை செய்துள்ளது.

தமது பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை எதிர்வரும் பெப்ரவரி மாதம் நடுப்பகுதியில் கூடவுள்ள கட்சியின் செயற்குழு கூட்டத்தின் போது சமர்ப்பிக்கவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் மீளாய்வுக் குழுவினால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்மானத்தை அறிவிப்பதற்கான காரணங்கள் குறித்தும் அந்த அறிக்கையில் தௌிவுபடுத்தப்பட்டுள்ளது.

பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தால் முகாமைத்துவப்படுத்தப்படும் வோல்ட் அன்ட் ரோ தனியார் நிறுவனத்தின் வீட்டிற்கான வரியை முறையற்ற விதத்தில் ரவிகருணாநாயக்க திரட்டியுள்ளதாக ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டமை ஒரு காரணமாகும்.

மேலும், ஆணைக்குழு முன்னிலையில் பொய் சாட்சியம் வழங்கியமை மற்றுமொரு காரணம் என ஐக்கிய தேசியக் கட்சியின் மீளாய்வுக் குழு தெரிவித்துள்ளது.

இந்த காரணிகளை பரிசீலனை செய்ததன் பின்னர் ரவி கருணாநாயக்கவிற்கு எதிராக சட்ட மா அதிபர் அல்லது இலஞ்ச ஊழல் விசாரணைக்குழு ஆகியன வழக்குத்தாக்கல் செய்யுமாயின் குறித்த வழக்கு நிறைவு பெறும் வரை அவரால் ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவர் பதவியை வகிக்க முடியாது என ஐக்கிய தேசியக் கட்சியின் மீளாய்வுக் குழு பரிந்துரைத்துள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்