இலங்கையர்களுக்கு சுப்பர் மூன், ப்ளூ மூன், பூரண சந்திர கிரகணத்தை ஒரே நேரத்தில் காணும் அரிதான வாய்ப்பு

இலங்கையர்களுக்கு சுப்பர் மூன், ப்ளூ மூன், பூரண சந்திர கிரகணத்தை ஒரே நேரத்தில் காணும் அரிதான வாய்ப்பு

இலங்கையர்களுக்கு சுப்பர் மூன், ப்ளூ மூன், பூரண சந்திர கிரகணத்தை ஒரே நேரத்தில் காணும் அரிதான வாய்ப்பு

எழுத்தாளர் Bella Dalima

31 Jan, 2018 | 3:51 pm

சுப்பர் மூன் (Super Moon) மற்றும் பூரண சந்திர கிரகணத்தை ஒரே நேரத்தில் காணும் அரிதான சந்தர்ப்பம் இலங்கை மக்களுக்கு வாய்த்துள்ளது.

152 வருடங்களுக்கு பின்னர் இவ்வாறானதொரு சந்தர்ப்பம் வாய்த்துள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் வானியல் மற்றும் விண்வௌிப் பிரிவின் பணிப்பாளர், பேராசிரியர் சந்தன ஜெயரத்ன தெரிவித்தார்.

இந்த வருடத்தின் சந்திர கிரகணம் இன்று பிற்பகல் 4.21 முதல் தென்படவுள்ளது.

36 ஆண்டுகளுக்கு பின்னர் சுப்பர் மூன் இன்று தென்படவுள்ளது.

வட அமெரிக்காவின் தென்பகுதி, ஆசியா, மத்திய கிழக்காசியா, ரஷ்யா மற்றும் அவுஸ்திரேலியாவில் தௌிவாகத் தென்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் போது பெரிய சந்திரன், நீல நிற சந்திரன் (Blue Moon) மற்றும் சந்திர கிரகணம் என மூன்று சந்திர நிகழ்வுகள் நிகழவுள்ளன.

இந்த நீலநிற சந்திரன் இந்த மாதத்தில் இரண்டாவது முறையாகத் தென்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பொதுவாக, இவ்வாறான நீல நிற சந்திரன் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறையே தென்படும் என வானியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இம்முறை தென்படவுள்ள சுப்பர் மூன் 14 சதவிகிதம் பெரியதாகவும் 30 சதவிகிதம் பிரகாசமாவும் பூமிக்கு மிக அண்மையிலும் தென்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்