இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்: மொமினுல் ஹக்கின் 175 ஓட்டங்களால் ஆதிக்கம் செலுத்தும் பங்களாதேஷ்

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்: மொமினுல் ஹக்கின் 175 ஓட்டங்களால் ஆதிக்கம் செலுத்தும் பங்களாதேஷ்

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்: மொமினுல் ஹக்கின் 175 ஓட்டங்களால் ஆதிக்கம் செலுத்தும் பங்களாதேஷ்

எழுத்தாளர் Bella Dalima

31 Jan, 2018 | 7:09 pm

மொமினுல் ஹக் பெற்றுக்கொண்ட 175 ஓட்டங்களின் மூலம் இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை பங்களாதேஷ் சவாலாக ஆரம்பித்துள்ளது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடும் பங்களாதேஷ் அணி, இன்றைய முதல் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 374 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

சித்தகொங்கில் இன்று ஆரம்பமான முதல் போட்டியில் பங்களாதேஷ் சார்பில் சன்சாமுல் இஷ்லாம் டெஸ்ட் அறிமுகம் பெற்றார்.

முதலில் துடுப்பெடுத்தாடத் தீரமானித்த பங்களாதேஷ் அணிக்காக தமிம் இக்பால், இம்ருல் கயிஸ் ஜோடி ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாகக் களமிறங்கியது.

இவர்கள் 72 ஓட்டங்களைப் பகிர்ந்துகொண்டபோது தமிம் இக்பால் 52 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

இம்ருல் கயிஸ் 40 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

மொமினுல் ஹக் மற்றும் முஷ்பிகுர் ரஹீம் ஜோடி மூன்றாம் விக்கெட்டிற்காக 236 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை வலுவான நிலைக்கு கொண்டு சென்றது.

மொமினுல் ஹக் தனது ஐந்தாவது சதத்தை எட்டினார்.

முஷ்பிகுர் ரஹீம் 92 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

இன்றைய ஆட்டம் முடிவுக்கு வந்தபோது மொமினுல் ஹக் 175 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்