முறிகள் விவகாரம், ஊழல் மோசடி: ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் தொடர்பில் 6 ஆம் திகதி விவாதம்

முறிகள் விவகாரம், ஊழல் மோசடி: ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் தொடர்பில் 6 ஆம் திகதி விவாதம்

எழுத்தாளர் Bella Dalima

30 Jan, 2018 | 4:54 pm

முறிகள் விவகாரம் மற்றும் பாரிய ஊழல் மோசடிகள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் தொடர்பில் எதிர்வரும் 6 ஆம் திகதி பாராளுமன்றத்தில் விவாதிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கான கடிதம் பிரதமரால் சபாநாயருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் நீல் இத்தவெல தெரிவித்தார்.

இந்த விவாதத்தை பெப்ரவரி 8 ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்ட போதிலும், உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் நிமித்தம் விவாதத்தை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்