முத்துபந்திய தீவை இலங்கை மிக விரைவில் இழக்கும் அபாயம் தோன்றியுள்ளது

முத்துபந்திய தீவை இலங்கை மிக விரைவில் இழக்கும் அபாயம் தோன்றியுள்ளது

எழுத்தாளர் Bella Dalima

29 Jan, 2018 | 9:11 pm

சிலாபம் – அரைச்சிக்கட்டுவ பகுதியில் அமைந்துள்ள முத்துபந்திய தீவை இலங்கை மிக விரைவில் இழக்கும் அபாயம் தோன்றியுள்ளது.

நாட்டிலிருந்து சுமார் 500 மீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ள முத்துப்பந்திய தீவைச் சுற்றி நிகழும் கடலரிப்பு காரணமாகவே இந்த அபாயம் தோன்றியுள்ளது.

மீன்பிடியை வாழ்வாதாரமாகக் கொண்ட சுமார் 150 குடும்பங்கள் இந்தத் தீவில் வசிக்கின்றன.

கடலரிப்பில் இருந்து தற்காப்புப் பெற கடந்த காலங்களில் தீவைச் சுற்றி கற்களால் அணைத்தடுப்புகள் கட்டப்பட்டன. ஆனாலும், அவை பயனற்ற முயற்சிகள் என தீவைச் சேர்ந்த மக்கள் தெரிவித்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்