தேர்தலுக்கு முன்னர் பாராளுமன்றத்தைக் கூட்டுவது தொடர்பில் நாளை இறுதித் தீர்மானம்

தேர்தலுக்கு முன்னர் பாராளுமன்றத்தைக் கூட்டுவது தொடர்பில் நாளை இறுதித் தீர்மானம்

தேர்தலுக்கு முன்னர் பாராளுமன்றத்தைக் கூட்டுவது தொடர்பில் நாளை இறுதித் தீர்மானம்

எழுத்தாளர் Bella Dalima

29 Jan, 2018 | 3:36 pm

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு முன்னர் பாராளுமன்றத்தைக் கூட்டுவது தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்காக நாளைய தினம் கட்சித் தலைவர்களின் கூட்டம் நடைபெறவுள்ளது.

இதனடிப்படையில், நாளை (30) காலை 10 மணிக்கு கட்சித் தலைவர்களுக்கான கூட்டத்திற்கு சபாநாயகரால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவிற்கும் இந்த கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு முன்னர் பாராளுமன்றத்தைக் கூட்டுவது தொடர்பில் நாளைய தினம் இறுதித் தீர்மானம் எட்டப்படும் என சபாநாயகர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்