தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் விஞ்ஞாபனம் வௌியீடு

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் விஞ்ஞாபனம் வௌியீடு

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் விஞ்ஞாபனம் வௌியீடு

எழுத்தாளர் Bella Dalima

29 Jan, 2018 | 8:12 pm

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான விஞ்ஞாபனம் வவுனியாவில் நேற்று (28) வௌியிடப்பட்டது.

உள்ளூராட்சி மன்றங்கள் வினைத்திறனுடன் செயலாற்றுவதற்குப் பொருத்தமான அபிவிருத்தித் திட்டங்களை இனங்கண்டு அதற்கான வேலைத்திட்டங்களை அடையாளப்படுத்தி வெற்றிகரமாக செயற்படுவதற்கு திட்டமிட்டுள்ளதாக கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

காணி உரித்தை உறுதிப்படுத்தல், வீட்டுத் திட்டங்களை விரிவாக்குதல், புனர்வாழ்வு பெற்ற போராளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தல் உள்ளிட்ட சில விடயங்கள் குறித்தும் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அழிந்த தேசத்தை மீளக்கட்டியெழுப்புவதற்கான முயற்சிகள் குறித்தும் காணிகளை விடுவித்துக்கொள்வதற்கான நடவடிக்கைகள் தொடர்பிலும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்