குவைத்தில் விசா இன்றி தங்கியுள்ள இலங்கையர்கள் நாடு திரும்ப வாய்ப்பு

குவைத்தில் விசா இன்றி தங்கியுள்ள இலங்கையர்கள் நாடு திரும்ப வாய்ப்பு

குவைத்தில் விசா இன்றி தங்கியுள்ள இலங்கையர்கள் நாடு திரும்ப வாய்ப்பு

எழுத்தாளர் Staff Writer

29 Jan, 2018 | 9:15 am

குவைத்தில் விசா இன்றி சட்டவிரேதமாக தங்கியுள்ள இலங்கையர்கள் நாடு திரும்புவதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

குவைத்தில் விசா இன்றி தங்கியுள்ள வெளிநாட்டு பிரஜைகளுக்கு அங்கிருந்து வெளியேறுவதற்கு பொது மன்னிப்பு காலம் வழங்கப்பட்டுள்ளது.

இன்று முதல் அடுத்த மாதம் 22 ஆம் திகதி வரை இந்த பொதுமன்னிப்பு காலம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த காலப்பகுதியில், விசா காலவதியான நிலையில் சட்டவிரோதமாக அங்கு தங்கியிருப்பவர்களுக்கு தண்டப் பணம் அறவிட மாட்டாது.

குவைத்தில் 15,447 இலங்கையர்கள் சட்டவிரோதமாக தங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்