முறிகள் தொடர்பில் விவாதம் நடத்துமாறு விடுத்த சவாலை சிலர் ஏற்றுக்கொண்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவிப்பு

முறிகள் தொடர்பில் விவாதம் நடத்துமாறு விடுத்த சவாலை சிலர் ஏற்றுக்கொண்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவிப்பு

எழுத்தாளர் Bella Dalima

28 Jan, 2018 | 9:10 pm

எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு முன்னர் முறிகள் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் விவாதம் நடத்துமாறு தாம் விடுத்த சவாலை சிலர் ஏற்றுக்கொண்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

அதன்படி, 8 ஆம் 9 ஆம் திகதிகளில் விவாதத்தை நடத்துவது சிறந்தது என ஜனாதிபதி இன்று பதுளையில் தெரிவித்தார்.

புத்தகத்தை மூடியவர்கள் மீண்டும் அதனைத் திறந்துள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இதேவேளை, தமது அதிகாரத்தின் படி 8 ஆம் திகதி பாராளுமன்றத்தை கூட்டவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று நுவரெலியாவில் நடைபெற்ற கூட்டத்தில் தெரிவித்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்