மலையக மக்களின் பிரச்சினைகளுக்கு தேர்தலின் பின்னர் தீர்வுத் திட்டம்: ஜனாதிபதி தெரிவிப்பு

மலையக மக்களின் பிரச்சினைகளுக்கு தேர்தலின் பின்னர் தீர்வுத் திட்டம்: ஜனாதிபதி தெரிவிப்பு

எழுத்தாளர் Bella Dalima

28 Jan, 2018 | 7:46 pm

மலையக மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான விரிவான புதிய திட்டமொன்றை உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்குப் பின்னர் நடைமுறைப்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

குடிநீர் பிரச்சினை, சுகாதாரம், மலசலக்கூடங்கள், நிர்வாக ரீதியான குறைபாடுகள் போன்ற பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு புதிய வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

தலவாக்கலையில் இன்று இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டத்திலேயே ஜனாதிபதி இதனைக் கூறினார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் உள்ளிட்ட அந்தக் கட்சியின் பிரதிநிதிகள், அமைச்சர்கள் மற்றும் பெருந்திரளான மக்கள் இதில் கலந்து கொண்டிருந்தனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்