பிரதமர் பாராளுமன்றத்தைக் கூட்டினால் தேர்தலைப் பிற்போட நேரிடும்: தேர்தல்கள் ஆணைக்குழு

பிரதமர் பாராளுமன்றத்தைக் கூட்டினால் தேர்தலைப் பிற்போட நேரிடும்: தேர்தல்கள் ஆணைக்குழு

எழுத்தாளர் Bella Dalima

28 Jan, 2018 | 4:17 pm

பிரதமர் ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 8 ஆம் திகதி பாராளுமன்றத்தைக் கூட்டினால் பெரும்பாலும் உள்ளூராட்சிமன்றத் தேர்தலைப் பிற்போடுவதற்கு நேரிடும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் இரத்தினஜீவன் ஹூலிடம் நியூஸ்பெஸ்ட் வினவியபோது, அவர் அதனை உறுதிப்படுத்தினார்.

பாராளுமன்றத்தை எதிர்வரும் 8ஆம் திகதி கூட்டுமாறு சபாநாயகருக்கு தாம் அறிவித்ததாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க, மொரவக்க பகுதியில் நேற்று (27) நடைபெற்ற நிகழ்வொன்றில் தெரிவித்தார்.

இது தொடர்பிலான கடிதத்தை நாளைய தினம் சபாநாயகருக்கு அனுப்பவுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

தேர்தல் பிரசாரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் பிரதமர் பாராளுமன்றத்தைக் கூட்டினால் பெப்ரவரி மாதம் 12 ஆம் திகதி அல்லது அதற்குப் பின்னரான ஒரு நாளில் உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு கவனம் செலுத்தியுள்ளதாகவும் பேராசிரியர் இரத்தினஜீவன் ஹூல் தெரிவித்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்