ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஸ வேட்பாளராக நிறுத்தப்பட மாட்டார்: தினேஷ் குணவர்தன

ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஸ வேட்பாளராக நிறுத்தப்பட மாட்டார்: தினேஷ் குணவர்தன

ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஸ வேட்பாளராக நிறுத்தப்பட மாட்டார்: தினேஷ் குணவர்தன

எழுத்தாளர் Bella Dalima

28 Jan, 2018 | 8:21 pm

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ 2020 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் வேட்பாளராக நிறுத்தப்பட மாட்டார் என பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்ஸ அமெரிக்க பிரஜை என்பதால், ஜனாதிபதித் தேர்தலில் அவரால் போட்டியிட முடியாது என தினேஷ் குணவர்தனவை மேற்கோள் காட்டி ”சிலோன் டுடே” பத்திரிகை செய்தி வௌியிட்டுள்ளது.

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் எந்தவொரு காரணத்திற்காகவும் அமெரிக்க பிரஜாவுரிமையைக் கைவிட விரும்பமாட்டார் என ஒன்றிணைந்த எதிர்க்கட்சி அறிந்துள்ளதாக தினேஷ் குணவர்தன சிலோன் டுடே பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்