ஜனாதிபதிக்கும் அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் இடையில் நாளை விசேட சந்திப்பு

ஜனாதிபதிக்கும் அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் இடையில் நாளை விசேட சந்திப்பு

ஜனாதிபதிக்கும் அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் இடையில் நாளை விசேட சந்திப்பு

எழுத்தாளர் Staff Writer

28 Jan, 2018 | 8:06 am

பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்களை நாளைய தினம் ஜனாதிபதி செயலகத்திற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நாளை காலை ஒன்பது மணிக்கு ஏற்பாடு செய்துள்ள கலந்துரையாடலில் பங்கேற்பதற்கே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த கலந்துரையாடல் குறித்து அறிவிப்பதற்கான கடிதங்களை அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலாளர் ஒஸ்டின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கியின் முறிகள் கொடுக்கல் வாங்கல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை மற்றும் பாரிய ஊழல் மோசடி தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணை அறிக்கை என்பன தொடர்பில் இதன்போது அதிக கவனம் செலுத்தப்படவுள்ளதாகவும் ஒஸ்டின் பெர்ணான்டோ குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்