ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு மூன்று புதிய மாவட்ட அமைப்பாளர்கள் நியமனம்

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு மூன்று புதிய மாவட்ட அமைப்பாளர்கள் நியமனம்

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு மூன்று புதிய மாவட்ட அமைப்பாளர்கள் நியமனம்

எழுத்தாளர் Bella Dalima

27 Jan, 2018 | 3:29 pm

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு புதிய மாவட்ட அமைப்பாளர்கள் மூவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

புதிய அமைப்பாளர்கள் மூவரும் தங்களுக்கான நியமனக் கடிதங்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இன்று முற்பகல் பெற்றுக்கொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்ட புதிய அமைப்பாளராக ரி.குலேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மாத்தளை மாவட்ட அமைப்பாளராக எம்.விஜயசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.

கண்டி மாவட்டத்திற்கான புதிய அமைப்பாளராக பூஜாபிட்டிய பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் அநுரகுமார மடலுஸ்ஸ நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டது.

இதேவேளை , ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளுக்கு ஆதரவு தெரிவித்து கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரான பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தலைவராக செயற்படும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஏறாவூர் பிரேதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஜீ.விஜிதரன் ஜனாதிபதியுடன் இணைந்துகொண்டுள்ளார்.

கருணா அம்மான் என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தலைமை வகிக்கும் சுயேட்சைக்குழுவின் வேட்பாளரான கே.கேதீஷ்வரனும் ஜனாதிபதியை சந்தித்து தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்