வெல்லவாய விபத்தில் மூவர் உயிரிழப்பு; ஐவர் காயம்

வெல்லவாய விபத்தில் மூவர் உயிரிழப்பு; ஐவர் காயம்

வெல்லவாய விபத்தில் மூவர் உயிரிழப்பு; ஐவர் காயம்

எழுத்தாளர் Bella Dalima

27 Jan, 2018 | 7:47 pm

மொனராகலை – வெல்லவாய பகுதியில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்ததுடன் மேலும் ஐவர் காயமடைந்துள்ளனர்.

வெல்லவாய – தணமல்வில பிரதான வீதியின் அயிஸ்பில்ல பிரதேசத்தில் இன்று காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

தணமல்விலயில் இருந்து வெல்லவாய நோக்கிப் பயணித்த கார், முன்னால் வந்த இலங்கை போக்குவரத்து சபை பஸ்ஸூடன் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.

காயமடைந்த ஐவரில் மூவரின் நிலை கவலைக்கிடமாகவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

காயமடைந்தவர்கள் தணமல்வில ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், மூவர் மேலதிக சிகிச்சைகளுக்காக ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

காலி – இமதுவ பிரதேசத்தைச் சேர்ந்தவர்களே காரில் பயணித்ததாக பொலிஸார் கூறினர்.

பஸ்ஸில் பயணித்த பெண்கள் இருவர் சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளதுடன், அவர்கள் தணமல்வில ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காரின் சாரதி வேகக்கட்டுப்பாட்டை இழந்ததாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இலங்கை போக்குவரத்து சபை பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்