நிதி மோசடி: ஆறுமுகன் கணேசமூர்த்திக்கு எதிரான வழக்குகள் மே மாதத்தில் விசாரிக்கப்படவுள்ளன

நிதி மோசடி: ஆறுமுகன் கணேசமூர்த்திக்கு எதிரான வழக்குகள் மே மாதத்தில் விசாரிக்கப்படவுள்ளன

நிதி மோசடி: ஆறுமுகன் கணேசமூர்த்திக்கு எதிரான வழக்குகள் மே மாதத்தில் விசாரிக்கப்படவுள்ளன

எழுத்தாளர் Bella Dalima

27 Jan, 2018 | 7:16 pm

ஊவா மாகாண சபை உறுப்பினர் ஆறுமுகன் கணேசமூர்த்திக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள நிதி மோசடி வழக்குகள் மே மாதம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

பதுளை பதில் நீதவானால் வழக்கு விசாரணைக்கான திகதி அறிவிக்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இதற்கமைய, மாகாண சபை உறுப்பினருக்கு எதிரான விசாரணை மே மாதம் 8 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

இதேவேளை, பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த மாகாண சபை உறுப்பினர் ஆறுமுகன் கணேசமூர்த்தி சிகிச்சைகளின் பின்னர் வைத்தியசாலையிலிருந்து வௌியேறியுள்ளார்.

கடும் நிபந்தனைகளுடன் நேற்று (26) அவருக்கு பதுளை பதில் நீதவானால் பிணை வழங்கப்பட்டது.

நிதி மோசடி தொடர்பில் ஆறுமுகன் கணேசமூர்த்திக்கு எதிராக 4 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

நிதி மோசடியை அடிப்படையாக வைத்து நேற்று முன்தினம் ஆறுமுகன் கணேசமூர்த்தி மீது மாகாண சபை வளாகத்தில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது ஆறு பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் நேற்று காலை அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

பின்னர் அவர்களுக்கு பிணை வழங்கப்பட்ட போதிலும், பிணைதாரர்கள் இன்மையால் அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

தொழில் பெற்றுத்தருவதாகக் கூறி பெருந்தோட்டங்களில் வசிப்போரிடம் ஊவா மாகாண சபை உறுப்பினர் ஆறுமுகன் கணேசமூர்த்தி பாரியளவில் பணத்தைப் பெற்றுக்கொண்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் பதுளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்