திறமையாக செயற்பட்ட U-Reporter – கள் Eagle விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்

திறமையாக செயற்பட்ட U-Reporter – கள் Eagle விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்

திறமையாக செயற்பட்ட U-Reporter – கள் Eagle விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்

எழுத்தாளர் Bella Dalima

27 Jan, 2018 | 8:05 pm

இலங்கையில் மக்களே செய்தி வழங்கும் முறைமையை அறிமுகம் செய்த நியூஸ்பெஸ்ட் நாடளாவிய ரீதியில் சுமார் 20,000 யூ-ரிப்போர்ட்டர்களை (U-Reporter) உருவாக்கியுள்ளது.

அவர்களில் தென் மாகாணத்தைச் சேர்ந்த யூ ரிப்போர்ட்டர்களுக்கான மாநாடு இன்று நடைபெற்றது.

இதன்போது, திறமையாக செயற்பட்ட யூ ரிப்போர்ட்டர்களை கௌரவித்து ஈகிள் (Eagle Awards) விருதுகளும் வழங்கப்பட்டன.

விருது வழங்கும் மாநாடு இன்று முற்பகல் மாத்தறை கூட்டுறவு மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் வரையறுக்கப்பட்ட கெப்பிட்டல் மகாராஜா நிறுவனத்தின் உயரதிகாரிகள் கலந்துகொண்டிருந்தனர்.

யூ ரிப்போர்ட்டர் ஈகிள் விருது வழங்கும் நிகழ்வு மாவட்ட ரீதியில் இடம்பெற்றதுடன், மாத்தளை மாவட்டத்திற்கான யூ ரிப்போர்ட்டர் விருதினை சத்துர தேஷான் வெற்றி கொண்டார்.

ஹம்பாந்தோட்டை மாவட்டத்திற்கான விருது துவான் ரசாக் வசமானது.

காலி மாவட்டத்தின் சிறந்த யூ ரிப்போர்ட்டராக டிலான் ரங்கிகெய் தெரிவானார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்