குவைத்தில் சட்டவிரோதமாகத் தங்கியுள்ள வௌிநாட்டினர் வௌியேற பொது மன்னிப்புக் காலம்

குவைத்தில் சட்டவிரோதமாகத் தங்கியுள்ள வௌிநாட்டினர் வௌியேற பொது மன்னிப்புக் காலம்

குவைத்தில் சட்டவிரோதமாகத் தங்கியுள்ள வௌிநாட்டினர் வௌியேற பொது மன்னிப்புக் காலம்

எழுத்தாளர் Bella Dalima

27 Jan, 2018 | 3:53 pm

குவைத் நாட்டில் 15 ஆயிரத்திற்கும் அதிகமான இலங்கை பிரஜைகள் சட்டவிரோதமாகத் தங்கியுள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்தது.

சட்டவிரோதமாகத் தங்கியுள்ளவர்களுக்கு குவைத் அரசாங்கத்தினால் பொது மன்னிப்புக் காலம் வழங்கப்பட்டுள்ளதாக பணியகம் மேலும் குறிப்பிட்டது.

இதன் பிரகாரம், எதிர்வரும் திங்கட்கிழமை (29) முதல் பெப்ரவரி 22 ஆம் திகதி வரை பொது மன்னிப்புக் காலம் வழங்கப்பட்டுள்ளதாக குவைத் அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

பொது மன்னிப்புக் காலத்திற்குள் விசா இன்றி நாட்டில் தங்கியுள்ள வௌிநாட்டு பிரஜைகள் அபராதம் ஏதும் செலுத்தாமல் நாட்டிலிருந்து வௌியேற முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு வௌியேறும் நபர்களுக்கு மீண்டும் குவைத்திற்கு வருகை தருவதற்கு அனுமதி வழங்கப்படும் என அந்நாட்டு அரசாங்கத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்