இலங்கையின் மீன்பிடி சட்டத்தை மறு பரிசீலனை செய்ய வலியுறுத்தக் கோரி புதுச்சேரி முதல்வர் பிரதமருக்குக் கடிதம்

இலங்கையின் மீன்பிடி சட்டத்தை மறு பரிசீலனை செய்ய வலியுறுத்தக் கோரி புதுச்சேரி முதல்வர் பிரதமருக்குக் கடிதம்

இலங்கையின் மீன்பிடி சட்டத்தை மறு பரிசீலனை செய்ய வலியுறுத்தக் கோரி புதுச்சேரி முதல்வர் பிரதமருக்குக் கடிதம்

எழுத்தாளர் Bella Dalima

27 Jan, 2018 | 4:47 pm

இலங்கை அரசின் புதிய மீன்பிடி சட்டத்தை மறு பரிசீலனை செய்ய வலியுறுத்துமாறு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

தமிழகம் மற்றும் புதுவை மீனவர்களை பாரியளவில் பாதிக்கக்கூடிய இந்த சட்டத்தை மறு பரிசீலனை செய்ய வலியுறுத்துமாறு கோரி தாம் கடிதம் எழுதியுள்ளதாக நாராயணசாமி ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுகின்ற போதிலும், மீனவர்களை விடுவிப்பதற்கு மத்திய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்காவிடின் மத்திய அரசு, இந்த பிரச்சினையை சர்வதேச அளவில் கொண்டு செல்ல வேண்டும் என நாராயணசாமி வலியுறுத்தியதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.

எல்லை தாண்டும் மீனவர்களுக்கு இலங்கை அரசாங்கம் அதிக அபராதம் விதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த புதிய சட்டத்தை இலங்கை அரசாங்கம் அமல்படுத்தாமல் இருப்பதற்கு பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்